பெங்களூரில் எல்.பி.ஜி சிலிண்டர் பற்றாக்குறைக்கு தீர்வு
பெங்களூர், 10 ஏப்ரல் (ஹி.ச.) கடந்த சில நாட்களாக எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நகரில் பல உணவகங்கள் நிலையம் பாதிக்கப்பட்டு, சில இடங்களில் சேவைகள் பாதியாக குறைக்கப்பட்டதுடன், சில உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் உணவிற்
L


பெங்களூர், 10 ஏப்ரல் (ஹி.ச.)

கடந்த சில நாட்களாக எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நகரில் பல உணவகங்கள் நிலையம் பாதிக்கப்பட்டு, சில இடங்களில் சேவைகள் பாதியாக குறைக்கப்பட்டதுடன், சில உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதனால் பொதுமக்கள் உணவிற்கு மிகவும் சிரமம் அடைந்தனர்.

வீட்டு பயன்பாட்டிற்கு எல்.பி.ஜி சிலிண்டர் வழங்குதலுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்தது.

இதனால் வணிக மற்றும் தொழில்துறைகளுக்கு விநியோகம் குறைந்தது.

இதுகுறித்து, தற்போது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:

தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு

70% வரை எல்.பி.ஜி வழங்கப்படும்.

இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 5 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர்கள் எளிதில் கிடைக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.

இந்த முடிவு மருந்து தயாரிப்பு, உணவு பதப்படுத்தல், வேளாண்மை, பேக்கேஜிங், எஃகு, உலோகம், செராமிக் உள்ளிட்ட பல துறைகளுக்கு உதவியாக இருக்கும்.

மார்ச் 2026 -க்கு முன் பயன்படுத்திய அளவின் 70% வரை எல்.பி.ஜி சிலிண்டர் வழங்கப்படும்.

தினசரி 0.2 TMT வரம்புக்குள் விநியோகம் நடைபெறும்.

இயற்கை எரிவாயுவை மாற்றாக பயன்படுத்த முடியாத துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலும், 5 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர்கள் எல்.பி.ஜி முகவர்கள்,தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் மற்றும் சில்லறை கடைகளில் கிடைக்கும்.

அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டையை காட்டினால் வாங்கலாம்.

விலை விவரம்:

இண்டன் 5 கிலோ சிலிண்டர் – ₹1,505 (ரீஃபில் ₹630)

எச்.பி 5 கிலோ சிலிண்டர் – ₹1,519 (ரீஃபில் ₹631)

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் பெங்களூரில் அமைந்துள்ள உணவகங்கள் மீண்டும் செயல்படு தொடங்கும் நகரின் பொருளாதாரம் சீராகும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA