மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார் – பீகார் அரசியலில் புதிய திருப்பம்
பீகார் , 10 ஏப்ரல் (ஹி.ச.) பீகார் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக விளங்கும் நிதிஷ் குமார் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார். அவரது இந்த முடிவு தேசிய அரசியல் மற்றும் பீகார் மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவ
B


பீகார் , 10 ஏப்ரல் (ஹி.ச.)

பீகார் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக விளங்கும் நிதிஷ் குமார் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார்.

அவரது இந்த முடிவு தேசிய அரசியல் மற்றும் பீகார் மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சியின் தலைவராகவும், நீண்ட காலமாக முதல்-மந்திரியாகவும் செயல்பட்டு வந்த நிதிஷ் குமார், சமீபத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.

இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலில், மாநிலங்களவை உறுப்பினராக மாறுவதற்காக அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்கள் வெளியானது.

இதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்தது.

நிதிஷ் குமார் தலைமையே கட்சிக்கும், அரசுக்கும் அவசியம் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வலியுறுத்தினர்.

இதனால், அவர் தனது முடிவில் மாற்றம் செய்து, முதல்-மந்திரி பதவியைத் தொடரும் வகையில் மாற்று வழியைத் தேர்வு செய்தார்.

அதன் ஒரு பகுதியாக, அவர் தனது எம்.எல்.சி.

(மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்) பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் மூலம், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கும் வழி உருவானது.

மாநிலங்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக பதவியேற்று வருகின்றனர்.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் உட்பட மொத்தம் 19 பேர் சமீபத்தில் பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார்.

அவர் மாநில அரசியலிலும், மத்திய அரசியலிலும் ஒரே நேரத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் இந்த மாற்றம் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

நிதிஷ் குமார் எடுத்துள்ள இந்த புதிய அரசியல் நிலைப்பாடு, எதிர்காலத்தில் தேசிய அரசியலில் அவரின் பங்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பீகார் அரசியல் அமைப்பில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA