சாதி வாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி, 10 ஏப்ரல் (ஹி.ச.) நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் ஏற்கனவே பீகார் மாநிலத்தில் இந்த பணிகள் முடிந்திருப்பதாகவும் இவற்றை உடனடியாக தடுக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
உச்ச நீதிமன்றம்


புதுடெல்லி, 10 ஏப்ரல் (ஹி.ச.)

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் ஏற்கனவே பீகார் மாநிலத்தில் இந்த பணிகள் முடிந்திருப்பதாகவும் இவற்றை உடனடியாக தடுக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள்,

இந்த மனுவில் என்ன மாதிரியான மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது? என்று வினவினர்.

மிகவும் மோசமான மற்றும் நாகரிகமற்ற சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.

இத்தகைய மொழி நடையுடன் கூடிய மனுவை இந்த நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் காட்டமாக கூறினர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்தச் சொற்களுக்காக மன்னிப்புக் கோரினார். ஆனால் , மனுவின் தன்மையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

சாதி வாரி கணக்கெடுப்பு என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்றும், அதில் தலையிடப் போதிய முகாந்திரம் இல்லை என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P