முதலமைச்சர் செயலாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கு- தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச) தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி முதலமைச்சரின் செயலாளர் உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த வழக்கற
High court


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச)

தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி முதலமைச்சரின் செயலாளர் உமாநாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னரும், முதலமைச்சரின் செயலாளராக உள்ள உமாநாத், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

மேலும், வழக்கின் விசாரணை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ