Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
கொக்கோ மரம் சராசரி அளவுடைய சிறிய மரமாகும்.
கிரையல்லோ மற்றும் ஃபாரஸ்டிரோ ஆகிய இரண்டு வகைகள் உள்ளன.
இவற்றில் க்ரையல்லோ சிவப்பு நிற காய்களையும் ஃபாராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களையும் கொண்டது.
இதில் ஃபாரஸ்டிரோ வகைகள் இந்தியாவில் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
ஈரப்பதம் அதிகம் உள்ள வெப்பமண்டலப் பகுதியில் வளரும்.இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
வறட்சி மற்றும் பனியை தாங்கி வளராது.
இந்த மரம் 1500 மீ உயரம் வளரும் மரமாகும்.கொக்கோ மரம் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.
கொக்கோ மரமானது சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.
Hindusthan Samachar / Durai.J