2026 தேர்தல் - தேமுதிக கூட்டணியின் அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் வெளியீடு
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.) 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் “முரசு கொட்டட்டும்... ஸ்டாலின் தொடரட்டும்... தமிழ்நாடு வெல்லட்டும்!” வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர
Hs


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) அதிகாரப்பூர்வ பரப்புரை பாடல் “முரசு கொட்டட்டும்... ஸ்டாலின் தொடரட்டும்... தமிழ்நாடு வெல்லட்டும்!” வெளியிடப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தேர்தல் எழுச்சிப் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும், மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்யவும் தேமுதிக – திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் களத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனின் அரசியல் லட்சியங்களை முன்னெடுத்து, அண்ணியாரின் தலைமையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

“முரசு கொட்டட்டும்.. ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!” என்ற முழக்கம், கூட்டணியின் தேர்தல் கோஷமாக உருவெடுத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ