Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 10 ஏப்ரல் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதிக்கு திமுக கூட்டணி விசிக கட்சிக்கு
ஒதுக்கப்பட்டது. இதை எடுத்து திமுக கூட்டணி கட்சியினர் பானை சின்னத்தை
பண்ருட்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் வரையப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பண்ருட்டி அருகே சித்திரைச்சாவடி பகுதியில் விசிக கட்சியின் பானை சின்னம் வரையப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் மாடு சாணத்தை கரைத்து சின்னத்தின் மேலே ஊற்றி அழித்துள்ளனர்.
தகவல் அறிந்த அப்பகுதி திமுக கூட்டணி கட்சியினர் புதுப்பேட்டை காவல்
நிலையத்தில் பானை சின்னத்தில் மீது மாடு சாணத்தை ஊற்றிய மர்ம நபர்கள் மீது
வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam