மீண்டும் மக்களை பீதியில் ஆழ்த்திய தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்!
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.) அனைத்து தரப்பு மக்களின் சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏப்ரல் மாத தொடகக்த்தில
தங்கம்


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

அனைத்து தரப்பு மக்களின் சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது.

இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 14,000க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன் படி , 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,125க்கும், சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,775க்கும் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P