ரிலீஸுக்கு முன்பே ‘ஜனநாயகன்’ முழு திரைப்படம் லீக் - விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை, 10 ஏப்ரல் (ஹி ச.) நடிகர் விஜய் நடித்ததாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்த திரைப்படம் முழுவதுமாக இணையதளங்களில் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுவது திரைப்பட வட்டார
Jananayakan


சென்னை, 10 ஏப்ரல் (ஹி ச.)

நடிகர் விஜய் நடித்ததாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்த திரைப்படம் முழுவதுமாக இணையதளங்களில் லீக் ஆகியுள்ளதாக கூறப்படுவது திரைப்பட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் கடைசி திரைப்படமாக பேசப்படும் ‘ஜனநாயகன்’, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், படம் இன்னும் சென்சார் சான்றிதழ் பெறாத நிலையில் உள்ளது.

இதனால் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியீடு தாமதமாகி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், முதற்கட்டமாக நேற்று திரைப்படத்தின் சுமார் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகியதாக தகவல் பரவியது.

அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்ட நிலையில், தற்போது முழு திரைப்படமே பல இணையதளங்களில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ஒரு பெரிய திரைப்படம் முழுவதுமாக லீக் ஆகும் சம்பவம், படக்குழுவுக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது படத்தின் வசூலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என திரையுலகில் கவலை நிலவுகிறது.

மேலும், திரைப்படம் எப்படி படம்பிடிக்கப்பட்டது, எவ்வாறு இணையத்தில் வெளியானது, யார் இதற்கு காரணம் என்பதைக் கண்டறிய படக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை, இந்த லீக் சம்பவத்தால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ