Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 10 ஏப்ரல் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம். குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் இவரது மகன் ஐயப்பன் சென்னையில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில்
பழனியம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சை பெறுவதற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தார்.
பின்பு சிகிச்சை முடிந்து விட்டு வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டுஅதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது அறையில் வைத்திருந்த இரும்பு பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு நகை டப்பா சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சடைந்த பழனியம்மாள் களமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் வீட்டில் பின்புறத்தில் உள்ள வீதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து செல்லும் வீடியோ கண்காணிப்பு கேமராவின் பதிவான காட்சிகளை வைத்து அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கிடுபுடி விசாரணையில் நோட்டமிட்டு பணியம்மாள் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை மணிகண்டன் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து 15 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN