திராவிட மாடல் 2.0 ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் - அமைச்சர் கே.என். நேரு
திருச்சி, 10 ஏப்ரல் (ஹி.ச) திருச்சி மேற்குத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு தொகுதி முழுவது
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் -  அமைச்சர் கே.என். நேரு


திருச்சி, 10 ஏப்ரல் (ஹி.ச)

திருச்சி மேற்குத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, இன்று அவர் திருச்சி மிளகுபாறை பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.

பிரசாரத்தின் போது, அந்த பகுதி பெண்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் கே.என். நேரு, திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லதரசிகளுக்கான வாக்குறுதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறியிருப்பதாவது,

கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். அடுத்து அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தற்போது கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

எனவே வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

என்று கூறினார்.

பிரசாரத்தில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b