Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 10 ஏப்ரல் (ஹி.ச.)
பெரம்பலூர் பாரதிதாசன் 2வது குறுக்குத் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நந்தினி (28), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் புதுவேட்டைக்குடியைச் சேர்ந்தவர்.
இவரது கணவர் பெரியசாமி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
பின்னர் குழந்தைகளை மாமியார் வீட்டில் தங்க வைத்து, பெரம்பலூரில் தனியாக இருந்து வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து என்பவருடன் நந்தினிக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
நேற்று இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோசமடைந்த நிலையில், பச்சமுத்து நந்தினியை தாக்கி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு அவர் தப்பியோடியுள்ளார்.
தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பியோடியுள்ள பச்சமுத்துவை பிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN