Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 10 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று அந்த வேட்பாளரை தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் தவெக தலைவர் விஜய்யும் நேற்று முன் தினம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்று காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்யும் சூழலில், நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் பிரம்மாண்டமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.
அதற்கான அனுமதியை பெற தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.
அதற்கு தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரமே காரணமாக அமைந்துள்ளது.
ஏனென்றால் தேர்தல் ஆணைய விதிகளின்படி முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி விஜய் தரப்பு முன்கூட்டியே கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் திட்டக்குடி, நெய்வேலி, வடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி இருந்தார்.
தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உதயநிதி ஸ்டாலின் மாற்று திட்டத்தை செயல்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b