Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் நேற்று கோயம்புத்தூர் வந்தடைந்தார்.
இந்த நிலையில் Coimbatore citizens forum அமைப்பு சார்பில் மத்திய அமைச்சர் பியுஷ்கோயலுடன் கோவை திருப்பூர் மற்றும் மேற்கு மண்டலத்தை சேர்ந்த தொழில்துறையினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் 300-க்கும் மேற்பட்ட தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சர் பியுஷ்கோயல்,
தொழிற்துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்துறையினரின் பங்கு முக்கியமானதாகும் என குறிப்பிட்டார்.
மேலும், பிரதமரின் வழிகாட்டுதலில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் சிறப்புரையில் பேசியதாவது,
தொழில்துறைக்கான திட்டங்களை உருவாக்கும்போது தொழிற்துறையினரோடு நேரடியாக கலந்த ஆலோசித்து திட்டங்கள் வகுக்கின்றோம், இதனால் தொழில்துறைக்கு உகந்த சூழல் உருவாக்கப்படுகிறது.
Made In India திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது, இளைஞர்கள் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொழில் முனைவராக உருவாகி வருகின்றனர் என்றார்.
மேலும், தொழில் நிறுவனங்களுக்கு தடையில்லாத மின்சாரங்களை வழங்குவதற்காக மத்திய அரசு சார்பில் புதிய மின்சார கிரிட்டிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இவை அந்தந்த மாநில அரசுகளின் மூலம் தடை இல்லாத மின்சாரத்தை வழங்கி வருவதாகவும், தமிழகத்திலும் தொழில்துறையினருக்கு தடை இல்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இந்தியா முன்னிலையில் உள்ளதாகவும், ChatGPT பயன்பாட்டில் சர்வதேச அளவில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.
உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளதாகவும் சர்வதேச அளவில் போர் சூழல் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளபோதும் சிறந்த கொள்கைகள் மற்றும் மானியங்களால் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி அடைந்து வருவதாகவும்,
இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்துறையினரும் பங்கேற்று தங்களது தொழில்களை விரிவு படுத்த வேண்டும், இதற்கு சரியான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் கொடுத்தனர்.
Hindusthan Samachar / Durai.J