Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 10 ஏப்ரல் (ஹி.ச.)
புதுச்சேரியில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி மொத்த
வாக்காளர்களின் எண்ணிக்கை 9,50,639 ஆகும்
(ஆண்கள்: 4,46,667 :
பெண்கள்:
5,03,832
மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்: 140)
பாலின விகிதம் 1000 ஆண்
வாக்காளர்களுக்கு 1129 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
30 தொகுதிகளுக்கும் சேர்த்து
மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிக பட்சமாக உழவர்கரை,
நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை மற்றும் நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதியில் 14
பேரும் குறைந்தபட்சமாக ஊசுடு தொகுதியில் 5 பேரும் போட்டியில் இருந்தனர்.
மொத்தம் 40 பெண் வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர்.
புதுச்சேரியில் நேற்று காலை 7 மணிமுதல் மாலை 6 வரை நடைபெற்ற வாக்குப்பதிவில்
தபால் வாக்குகள் மற்றும் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சேர்த்து மொத்தம்
7,29,172 வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி மாவட்டத்தின் மொத்தம்.இறுதி
நிலவரப்படி. 91.83 சதவீத வாக்குகள் பதிவானது.
இதுவரை நடந்த தேர்தல்களில் இதுவே உச்சமாகும்.
இவை அனைத்து வாக்கு இயந்திரங்களும் இரவு சீல் வைக்கப்பட்டு வாக்கு
என்னும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டு ஸ்டராங் ரூமில் வைக்கப்பட்டு சீல்
வைக்கப்பட்டது.
வாக்கு என்னும் நாளான
மே 4 ஆம் தேதி வரை துணை ராணுவம், உள்ளூர் காவல்துறை மற்றும் ரிசர்வ் பட்டாலியன் ஆகியோர் மற்றும் வாக்கு என்னும் மையம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள்
கொண்டுவரப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam