தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 419 பேர் போட்டி!
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், மார்ச் 30-ஆம் தேதி ஏப்ரல் 06-ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது. வேட்பு மனுவை நேற்று (ஏப்ரல் 9 ஆம்
Election Commission of India


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், மார்ச் 30-ஆம் தேதி ஏப்ரல் 06-ஆம் தேதி வரை நடைபெற்றது.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்தது.

வேட்பு மனுவை நேற்று

(ஏப்ரல் 9 ஆம் தேதி) மாலை 3.00 மணிக்குள் திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இறுதி வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தமிழகம் முழுவதும் இருந்து 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரசீலனைக்குப் பிறகு இரவு 11.59 மணி நிலவரப்படி, 4,618 மனுக்கள் ஏற்கப்பட்டு, 2460 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 521 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 616 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன.

அவற்றில், 173 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 24 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 47 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக சைதாப்பேட்டை தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் பட்டியலை வைத்து, தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னம் உள்ளது.

பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுயேட்சையாக போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

Hindusthan Samachar / ANANDHAN