த.வெ.க தலைவர் விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கிய தொண்டர்கள்
மதுரை, 10 ஏப்ரல் (ஹி.ச) தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். தேர்தலை முன்னிட்டு சென்னை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் இதுவரை பரப்புரையை நிறைவு செய்த
த.வெ.க தலைவர் விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து விபத்தில் சிக்கிய தொண்டர்கள்


மதுரை, 10 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.

தேர்தலை முன்னிட்டு சென்னை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் இதுவரை பரப்புரையை நிறைவு செய்த நிலையில், இன்று சிவகங்கை மாவட்டத்தின் கரைக்குடி தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த பரப்புரைக்கு அனுமதி கோரி காவல்துறையில் தவெக தரப்பு கடிதம் வழங்கி இருந்த நிலையில், 37 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த பிரச்சாரம் காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு, தேவர் சிலை அருகிலுள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்விற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பரப்புரையில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 9.30 மணி அளவில் தவெக தலைவர் விஜய் மதுரை புறப்பட்டார்.

மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக பரப்புரை நடைபெறும் காரைக்குடி வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது விஜய் பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து பைக்கில் சென்றபோது இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர்.

இளைஞர்கள் சென்ற பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b