Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 10 ஏப்ரல் (ஹி.ச.)
இந்தியாவின் முன்னணி மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து பிராண்டான ‘இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ்’ பயணிகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டிலேயே முதன்முறையாக காற்று சுத்திகரிக்கப்பட்ட பேருந்து சேவையை கோயம்புத்தூர் - சென்னை வழித்தடத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
தூய்மையான காற்று - பாதுகாப்பான பயணம்
பொதுவாகப் பேருந்து பயணங்களின் போது கேபினுக்குள் இருக்கும் காற்றின் தரம் (Air Quality), உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைத்த அளவை விட 2 முதல் 3 மடங்கு மோசமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனைச் சரிசெய்யும் விதமாக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த AQI பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பம்சங்கள்:
PM2.5 கட்டுப்பாடு: பயண நேரத்தின் 90% பகுதியில், காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவு (PM2.5) சுமார் 40 µg/m³ என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது. இது வெளிப்புறக் காற்றை விட மிகவும் தூய்மையானதாகும்.
வெளிப்படைத்தன்மை: பேருந்தின் உள்ளேயும், மொபைல் செயலியிலும் தற்போதைய காற்றின் தரம் (AQI) மற்றும் PM2.5 அளவை பயணிகள் நேரலையாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
எளிதான முன்பதிவு: பயணிகள் தங்களது பயணத்தை முன்பதிவு செய்யும் போது, IntrCity SmartBus.AQI என்ற குறியீட்டைக் கொண்டு இந்தப் பேருந்துகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
நிர்வாகத்தின் கருத்து
இது குறித்து இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ மனிஷ் ரதி கூறுகையில்:
கோயம்புத்தூர் ஒரு முக்கியமான போக்குவரத்து மையமாகும்.
குறிப்பாகக் கோவை – சென்னை இடையே அதிக அளவிலான பயணிகள் பயணிக்கின்றனர்
நீண்ட தூரப் பயணங்களில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒன்றான 'காற்றின் தரத்தை' மேம்படுத்தவே இந்த ஸ்மார்ட்பஸ் AQI சேவையைத் தொடங்கியுள்ளோம்.
பயணிகள் சுவாசிக்கும் காற்று தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம் என நிறுவனத்தின் இணை இயக்குனர் மனிஷ் ரதி தெரிவித்தார்..
நிறுவனத்தைப் பற்றி:
இன்டர்சிட்டி ஸ்மார்ட்பஸ் இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் 630-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கி வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA