தமிழகத்தில் 4051 வேட்பாளர்கள் களம் - இறுதி பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு, 10 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 4051 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்ட வாரியான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சில ம
வேட்பாளர்கள்


தமிழ்நாடு, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 4051 பேர் போட்டியிடுகின்றனர்.

மாவட்ட வாரியான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், சில மாவட்டங்களில் அதிக போட்டியும், சில இடங்களில் குறைந்த போட்டியும் காணப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 419 பேர் 16 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 79 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

இதேவேளை, திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் தலா 6 பேர் வீதம் மொத்தம் 18 பேர் போட்டியிடுகின்றனர்.

மேலும் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam