வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 20 சவரன் தங்க நகை கொள்ளை!
ராணிப்பேட்டை, 10 ஏப்ரல் (ஹி.ச.) ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள பெருமாள் கோவில் தெரு பகுதியில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வரும் ரமேஷ் (51) என்பவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த சமயம் வீடு பூட்டிய நிலை
Thimiri Police Station


ராணிப்பேட்டை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள பெருமாள் கோவில் தெரு பகுதியில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வரும் ரமேஷ் (51) என்பவரின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் நடந்த சமயம் வீடு பூட்டிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN