அரசியலை பற்றி இ.பி.எஸ்-க்கு ஒன்றும் தெரியாது - செல்வப்பெருந்தகை காட்டம்
கன்னியாகுமரி, 10 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேஷ்குமாருக்கு ஆதரவாக தொலையாவட்டம்
செல்வப்பெருந்தகை


கன்னியாகுமரி, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேஷ்குமாருக்கு ஆதரவாக தொலையாவட்டம் சந்திப்பில் திறந்த வெளி வாகனத்தில் இருந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர்,

எப்படி உத்தரப்பிரதேசம், மத்தியப்

பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் இங்கெல்லாம் மக்களுக்கு எதிரான மனநிலையில்

பாஜக ஆட்சி இருக்கிறதோ, புல்டோசர் ஆட்சி நடக்கிறதோ, அந்த நிலை தமிழ்நாட்டில்

ஏற்படக்கூடாது, விட்டுவிட மாட்டோம் என்று உறுதியாகத் தமிழ்நாட்டு மக்கள் சபதம்

ஏற்றிருப்பதாக தெரிவித்தார்.

ஆகவே, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றியை தங்களுடைய இந்தியா கூட்டணி,மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி வெற்றி

பெறப் போகிறது என நம்பிக்கை தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குச் சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுவதற்கு எந்தவிதத் தகுதியும் கிடையாது என்ற செல்வப் பெருந்தகை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு

நடக்கும்போது, காவல்துறையை, உளவுத்துறையைக் கையில் வைத்துக்கொண்டிருந்த

எடப்பாடி என்ன சொன்னார்? என கேள்வி எழுப்பினார்.

ஏதாவது

தவறுகள் நடந்தால் மாண்புமிகு முதலமைச்சர் வெளிப்படைத் தன்மையோடு நடவடிக்கை

எடுப்பதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

ஹிந்தி வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தெரியும்? இப்போ ஹிந்தி பிரச்சார சபா டி.நகர்ல இருக்கே, யாராவது போய் மூடிட்டாங்களா அதை? ஆக எடப்பாடிக்கு அரசியலே தெரியாத மடைப்பாடிக்கு ஒண்ணுமே தெரியாது என காட்டமாக விமர்சித்தார்.

என்ன அவருக்கு அரசியல் தெரியும்? என்ன படிச்சிருக்கார் அரசியல்ல அவரு? இல்லேன்னா 'பால்டாாயில்' சாப்பிட்டு சாக வேண்டியதுதான்னு எங்க தலைவரைப் பத்திப் பேசுவாரா? கொரோனால செத்துப் போயிருக்கலாம்னு எவ்வளவு அவதூறு!

தமிழ்நாட்டு மக்கள் இதையும் பார்த்துட்டுத் தானே இருக்காங்க.

அரசியலும்

தெரியாது, ஒண்ணும் தெரியாது, ஆட்சிக்கு வரத் துடிச்சுட்டு இருக்கார் பிஜேபி

மேல சவாரி செஞ்சுக்கிட்டு என செல்வப் பெருந்தகை பொறுமை இழந்து விமர்சித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P