உதகையில் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை
உதகை, 10 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரமாக்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவின
அண்ணாமலை


உதகை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் எதிர்வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை தீவிரமாக்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவின்

முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக உதகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் போஜராஜன் ஆதரித்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை ஹெலிகாப்டரில் உதகைக்கு வருகை புரிந்துள்ளார்.

தீட்டுக்களில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக ஏடிசி திடலுக்கு சென்றார்.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை அவர்கள் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam