தேர்தல் பாதுகாப்பு குறித்து டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் அனைத்து டிஜிபிக்கள், ஏடிஜிபிகள் மற்றும் ஐஜிக்களுக்கு சுற்றறிக்கை
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சந்திப் ராய் ரத்தோர், அனைத்து டிஜிபிக்கள் ஐஜிக்கள், ஏடிஜிபிகள் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் பல அதிர
சந்திப்


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சந்திப் ராய் ரத்தோர், அனைத்து டிஜிபிக்கள் ஐஜிக்கள், ஏடிஜிபிகள் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

வாரம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடக்கக்கூடிய தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நட்சத்திர அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பரப்புரைகள், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக முன் கூட்டியே திட்டமிட வேண்டும், சுவிதா இணையதளம் வாயிலாக அனுமதி கேட்கப்படகூடியவர்களுக்கு முறையாக அனுமதி வழங்குவது தொடர்பாக உரிய நேரத்தில் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் பறக்கும் படையினருடன் இணைந்து சோதனைக்கு துணை ராணுவத்தினரை பயன்படுத்த வேண்டும், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முன்பு பறிமுதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும், அடுத்த ஒரு மாதத்திற்கு தேர்தல் பணிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P