தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியதாக புகார்- ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை..!
சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.) வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியுள்ள நிலை
ஆதவ்


சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியுள்ள நிலையில் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட பரசுராம ஈஸ்வரன் கோயில் வடக்கு மாட வீதி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களில் நான்கின் மூன்று பங்கு குழந்தைகளும் சிறுவர்களும் மட்டுமே.

தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் குழந்தைகளையும் சிறுவர்களையும் பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு போன்ற அரசியல் நிகழ்வுகளில் பயன்படுத்தக் கூடாது.

அப்படி அரசியல் கட்சிகள் குழந்தைகளையும் சிறுவர்களையும் வாக்கு சேகரிக்க பயன்படுத்தினால் அது தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியதாகும். இது சட்டப்படி தவறு.

ஆனால் ஆதவர் அர்ஜூனாவின் வாக்கு சேகரிப்பு நிகழ்வில் நிறைய குழந்தைகளும், சிறுவர் சிறுமிகளும், பள்ளி மாணவர்களும் தோளில் கட்சித் துண்டை அணிந்தும், TVK வின் டி-ஷர்ட்களை அணிந்தும், கட்சியின் வண்ணம் பொருந்திய பலூன்களை கையில் ஏந்தியும், விசில் ஊதியப்படி வாக்குச் சேகரிப்பில் பயன்படுத்தப்பட்டனர்.

தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறிய ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P