Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 10 ஏப்ரல் (ஹி.ச.)
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது மயிலாடுதுறை செல்வதற்காக திண்டுக்கலை சேர்ந்த சுந்தரம் 68, அவரின் மனைவி சகுந்தலா 62 காத்திருந்தனர்.
அப்போது நடைமேடைக்கு வந்த ரயிலில் அவர்கள் அவசர, அவசரமாக பைகளுடன் ஏறினர்.
பின்னர் அந்த வண்டி, நெல்லை-தாதர் செல்லும் சிறப்பு ரயில், தவறுதலாக
ஏறிவிட்டோம் என உணர்ந்து இரண்டு பேரும் உடனடியாக கீழே இறங்கினர். பார்த்த
ரயில்வே பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு உதவினர்.
இதற்கிடையே அவர்கள் வைத்திருந்த கைப்பைகள் ரயிலில் சென்றது.
உடனே சுந்தரம் ஓடிச்சென்று பைகளை எடுத்தார். அபபோது ரயிலின் வேகத்தில் இழுக்கப்பட்ட அவர்,
நடைமேடைக்கும், ரயிலுக்கு நடுவிலும் சிக்கிக்கொண்டார். இதைக்கவனித்த ரயில்வே
பாதுகாப்பு படைவீரர் பாலசுப்பிரமணியன் துரிதமாக செயல்பட்டு முதியவரை வெளியே இழுத்து மீட்டார். இதனால் முதியவர் காயமின்றி உயிர் தப்பினார்.
முதியவரை ஆபத்திலிருந்து நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரரை பயணிகள் பாராட்டினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam