Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஏப்ரல் (ஹி.ச.)
விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக சபரிநாதன் போட்டியிடுகிறார்.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் தவெக வேட்பாளர் சபரிநாதன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரை வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒருவர் சபரிநாதன் மீது கல்லை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அது அவர் மீது படவில்லை. பரப்புரை வாகனத்தில் மீது விழுந்தது.
வாகனம் சேதமானது.
இதனை கண்ட தவெக நிர்வாகி ராமநாதன் கல்வீசியவரை மடக்கி பிடிக்க முயன்றபோது அவரை தாக்கினார்.
இது திமுக ஏரியா என கூறி தவெக அளித்த துண்டு பிரசுரத்தை கிழித்து எறிந்து ஆபாசமாக திட்டி விட்டு ஓடி விட்டதாக தெரிகிறது.
இது குறித்து தவெக மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான பாண்டியராஜ் சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ