காரைக்குடியில் இன்று விஜய் தேர்தல் பிரசாரம்
சிவகங்கை, 10 ஏப்ரல் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் இன்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மதுரை விமான நிலையம் வழியாக வருகை தரும் அவர், மேலூர் மற்றும் திருப்பத்தூர்
விஜய்


சிவகங்கை, 10 ஏப்ரல் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் இன்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மதுரை விமான நிலையம் வழியாக வருகை தரும் அவர், மேலூர் மற்றும் திருப்பத்தூர் வழியாக காரைக்குடி வந்து சேருகிறார். பின்னர் நகரில் திறந்த வேனில் நகர்வலம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் ஆதரவு கோர உள்ளார்.

பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கும் இந்த நகர்வலம், வ.உ.சி சாலை, கழனிவாசல் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடைபெறுகிறது.

தொடர்ந்து கண்ணதாசன் மணி மண்டபம் அருகில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றுகிறார்.

இந்த பிரசாரத்திற்கு போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சி முடிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜயின் வருகையையொட்டி காரைக்குடியில் அதிகளவில் மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam