விழுப்புரத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம்
தமிழ்நாடு, 10 ஏப்ரல் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்தின் போது, கூட்டங்களில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆத
அன்புமணி


தமிழ்நாடு, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்த பிரசாரத்தின் போது, கூட்டங்களில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு கோருகிறார்.

மாநில அரசின் செயல்பாடுகள், மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்வைத்து பேச உள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியின் வாக்கு வங்கி வலுப்படுத்தும் நோக்கில் இந்த பிரசாரம் நடைபெற்று வருகிறது.

மேலும், கூட்டணி அரசியல் சூழலில் முக்கியமான பகுதியாக விளங்கும் விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி ஆதரவை அதிகரிக்க இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பிரசாரத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam