மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் - நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
புதுடெல்லி, 10 ஏப்ரல் (ஹி.ச.) தனது வீட்டில் பண மூட்டை (cash row) முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிக்கிய யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ம
யஷ்வந்த்


புதுடெல்லி, 10 ஏப்ரல் (ஹி.ச.)

தனது வீட்டில் பண மூட்டை (cash row) முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிக்கிய யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, அரசு வழங்கிய இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, ஒரு அறையில் எரிந்த நிலையில் ரூ.500 நோட்டுகள் மூட்டையாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அவரை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றினர்.

மேலும், அவரை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், உள் விசாரணையும், பதவி நீக்க நடவடிக்கையும் நடைபெற்று வந்த சூழலில், யஷ்வந்த் வர்மா திடீரென தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார். இந்த ராஜினாமா மூலம் அவருக்கு எதிரான பதவி நீக்க (impeachment) நடவடிக்கை நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த சம்பவம் இந்திய நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P