அரசு வாகனங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு – அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி அதிமுக மனு
சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்த பின்னர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்கு அரசு வ
Inbadurai


சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்த பின்னர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்கு அரசு வாகனங்களை பயன்படுத்தியதாகவும், சில அரசு அதிகாரிகள் அரசின் சொத்துகளை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முதலமைச்சர் பிரசாரம் செய்யும் போது, அவரது வாகனத்தை பின்தொடர்ந்து அரசு வாகனம் சென்றது.

அதில் அரசு அதிகாரிகள் இருந்தனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது,” என்று அவர் கூறினார்.

மேலும், அரசு அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தால், அந்த தேர்தலே செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பெண்களின் மாண்பை குறித்து திமுக விமர்சனம் செய்வதற்கான உரிமை இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுபவர்கள், கடந்த தேர்தலில் ஆ.ராசா பேசியபோது எங்கே இருந்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

கொடநாடு வழக்கை குறித்தும் அவர் விமர்சனம் செய்து, அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை வெளியே கொண்டு வந்தது திமுக சார்பான வழக்கறிஞர்களே என்று குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் வளங்களை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / P YUVARAJ