Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 11 ஏப்ரல் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின்
வேட்பாளராக மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார்.இவர்
பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இந்த
நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ராஜபாளையம் அருகே அம்பலபுலி பஜார்
சுப்பிரமணியபுரம் தெருவிற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்
மருத்துவர் கார்த்திகேயன் அதிமுக வினர் வீடு வீடாக சென்று கணக்கெடுத்து
பெயர்களை எழுதியவர்களிடம் கேள்வி எழுப்பி சம்பவ இடத்திற்கு தேர்தல்
அதிகாரிகளை வரவழைத்து பின்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ராஜபாளையம் விவேகானந்தர் தெரு பகுதியில் அதிமுக வார்டு
பிரதிநிதிகள் பணப்பட்டுவாடா செய்வதாக தகவல் அறிந்து சம்பவத்திற்கு சென்ற
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் தேர்தல்
அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல்
அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அதிமுக வார்டு
பிரதிநிதிகள் இருவரை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
அவர்களிடமிருந்து 27ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதற்கான
31 டோக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்தான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி
வருகிறது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam