டிடிபி அலுவலக பயிற்சி வகுப்புகள் தீவிரம் தொடர்ந்து நேரில் பங்கேற்று தொண்டர்களை ஊக்குவிக்கும் சந்திரபாபு நாயுடு
அமராவதி , 11 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவருமான சந்திரபாபு நாயுடு, கட்சி அமைப்பை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காகஅமராவதியில் உள்ள டிடிபி மத்திய அலுவலகத்தில்
A


அமராவதி , 11 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவருமான சந்திரபாபு நாயுடு, கட்சி அமைப்பை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார்.

இதற்காகஅமராவதியில் உள்ள டிடிபி மத்திய அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி முகாம்களில் அவர் தொடர்ந்து பங்கேற்று, கட்சித் தொண்டர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

இந்த பயிற்சி முகாம்களில் மூத்த தலைவர்களின் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அரசியல், நிர்வாகம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில்கலந்து கொள்ளும் சந்திரபாபு நாயுடு, தொண்டர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, தனது அரசியல் அனுபவங்களையும், ஆட்சிப் பணிகளில் கிடைத்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.

மேலும், தற்போதைய அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்குகிறார்.

தரைமட்டத்தில் திட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து தொண்டர்களிடமிருந்து நேரடியாக கருத்துகளையும் சேகரித்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,

நாம் கிளீன் அண்ட் கிரீன், கிளீன் எனர்ஜியை முன்னெடுத்து வருகிறோம். அதேபோல் கிளீன் அரசியலையும் கடைப்பிடிக்க வேண்டும்.

கிளீன்அரசியலுக்கான முகவரியாக டிடிபி உருவாக வேண்டும். நேர்மறை அரசியலை முன்னெடுத்து, நேர்மறை வாக்குகளை அதிகரிக்க வேண்டும்.

கடந்த காலத்தை விட கட்சியின் வாக்கு வங்கி உயர வேண்டும், என்றார்.

அரசு எடுத்து வரும் முயற்சிகளை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, கட்சித் தொண்டர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ‘E3’ (Ethical Economic Empowerment) என்ற புதிய திட்டத்தை அவர் அறிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை நெறிமுறை மற்றும் நேர்மையுடன் பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவோம், என்று தெரிவித்தார்.

என் குடும்பத்திற்காக நான் நினைப்பது போலவே, டிடிபி குடும்பத்திற்கும் நினைக்கிறேன், என்ற அவரது உரை, தொண்டர்களில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA