முதலீட்டு சூழலுக்காக தடைகளை தாண்டுகிறார் தொழில்துறை அமைச்சர் டி.ஜி. பாரத் - நாரா லோகேஷ் பாராட்டு
அமராவதி, 11 ஏப்ரல் (ஹி.ச) ஆந்திரப் பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஜி. பாரத் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் த
A


அமராவதி, 11 ஏப்ரல் (ஹி.ச)

ஆந்திரப் பிரதேச மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஜி. பாரத் ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவை மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளத்தில் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் டி.ஜி. பாரத் ஜம்பிங் உள்ளிட்ட கடினமான பயிற்சிகளை மேற்கொள்வது காணப்படுகிறது.

இதுகுறித்து லோகேஷ் வெளியிட்ட பதிவில்,

மாநிலத்தில் சிறந்த முதலீட்டு சூழலை உருவாக்குவதற்காக எங்கள் தொழில்துறை அமைச்சர் டி.ஜி. பாரத் அவர்கள் இப்படியே தடைகளை தாண்டி செயல்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘Speed of Doing Business’, ‘Choose Speed Choose AP’ என்ற ஹாஷ்டேக்குகளையும் அவர் இணைத்துள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, அரசியல் மற்றும் பொதுமக்கள் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA