அசாமில் இன்று ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு
அசாம், ஏப் 11 (ஹி.ச.) அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் (வடக்கு) தொகுதியில் உள்ள பேபிலேண்ட் உயர்நிலை ஆங்கிலப் பள்ளியில் செயல்பட்ட 239-ஆம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி,
A


அசாம், ஏப் 11 (ஹி.ச.)

அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் (வடக்கு) தொகுதியில் உள்ள பேபிலேண்ட் உயர்நிலை ஆங்கிலப் பள்ளியில் செயல்பட்ட 239-ஆம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதுகுறித்து, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி,

பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அசாம் மாநிலத்தின் இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரங்களை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA