Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த நிலையில், அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது சுற்றுலா விசாவில் மலேசியா சென்று சென்னை வந்து இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த பயணி கொண்டு வந்த மிகப் பெரிய சூட்கேஸ் மற்றும் கூடைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்துப் பார்த்து சோதனை செய்தனர்.
அதில் கொடிய விஷம் கொண்ட நாகப் பாம்புகள், ராஜ நாகங்கள் உள்ளிட்ட 34 அரிய வகை பாம்புகள் மற்றும் உயிரினங்கள் இருந்துள்ளன.
இதனையடுத்து அந்த அரிய வகை உயிரினங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை கடத்தி வந்த பயணியையும் கைது செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN