Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 11 ஏப்ரல் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் ஜெயா என்ற பெயரில் HP சிலிண்டர் கேஸ் கம்பெனி இயங்கி வருகிறது.
இதன் மூலம் ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலிண்டர் வினியோகிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரான் அமெரிக்கா போர் காரணமாக ஏற்கனவே சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 21 உள்ளிட்ட தேதிகளில் சிலிண்டர் புக்கிங் செய்தவர்களுக்கு தற்போது வரை சிலிண்டர் விநியோகம் செய்யவில்லை. இந்த நிலையில் இன்று ஜெயா HP சிலிண்டர் நிறுத்தினர்.
லாரி ஒன்றில் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு புதியம்புத்தூர் தட்டப்பாறை சாலையோரமாக ஊருக்கு வெளிப்புறமாக நிறுத்தி சிலிண்டர் விநியோகிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர் இது குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரு சக்கர வாகனம் சைக்கிள் ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மூலம் காலி சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு மேற்படி சிலிண்டர் லாரி நிற்கும் இடத்திற்கு வந்து குவிந்தனர்.
மேலும் ஒரே நேரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பல்வேறு தரப்பினரும் சிலிண்டர் வாங்குவதற்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சிலிண்டர் வாங்குவதற்கு பெண்கள் கை குழந்தைகள் வைத்திருக்கும் பெண்கள் ஆண்கள் என பல்வேறு தரப்பினர்களுக்கும் கடும் வெயிலிலும் காத்திருந்து சிலிண்டர் வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,
மற்ற சிலிண்டர் கம்பெனிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று விநியோகம் செய்வதுபோல் கட்சி HP நிறுவனத்தீனரும் வீடுகளுக்கு நேரடியாக சென்று சிலிண்டர்களை விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் சிலிண்டர் புக்கிங் செய்து பணம் கட்டியவர்களுக்கு கூடுதலாக 50 கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam