Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், திமுக பெண் கவுன்சிலர் விசாலாட்சி கபிலன் மீது சர்ச்சை எழுந்துள்ளது.
வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசன் மௌலானா போட்டியிடும் நிலையில், திருவான்மியூர் பகுதியில் நடைபெறவுள்ள பிரச்சாரத்திற்கு மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களை திரட்ட முயற்சி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக, 180-வது வார்டைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் விசாலாட்சி கபிலன், மகளிர் சுயஉதவி குழு வாட்ஸ்அப் குழுவில், “பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றால் கடன் உதவி செய்து தரமாட்டேன்” என மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண்களை அதிக அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த அழுத்தம் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இந்த ஆடியோ வெளியாகியதையடுத்து பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், தேர்தல் நேரத்தில் அதிகார துஷ்பிரயோகம் குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ