Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 11 ஏப்ரல் (ஹி.ச)
ஈஸ்டர் பண்டிகையில் முக்கிய நிகழ்வான பாஸ்கு திருவிழா. 96 பட்டியலில்
தாய்கிராமமாக விளங்கக்கூடிய திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை
ஆலயத்தில் 335 ஆம் ஆண்டு பாஸ்கர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று
வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை அன்று கொடியேற்றத்துடன்
துவங்கியது. வெள்ளிக்கிழமை இயேசுபிரான் வாழ்ந்த வாழ்க்கையை உணர்த்தும் விதமாக மனிதர்கள் தத்துரூபமாக நடித்துக் காண்பித்த பாடுகளின் பாஸ்கு நடைபெற்றது.
இதில் இறுதியாக இயேசு சிலுவையிலே அறைந்து உயிர் நீத்த காட்சி அனைவரையும்
மெய்சிலிர்க்கச் செய்தது.
இதன் தொடர்ச்சியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட
தும்பாவில் மரித்த இயேசுவின் திருவுடலை வைத்து ஆயிரக்கணக்கான இறைமக்கள் கையில்
மெழுகுவர்த்தி ஏந்தியவாறு ஆலயத்தை சுற்றி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு மேலோகத்தில் சாத்தான்கள், பேய்களின் அராஜகம் எவ்வாறு இருக்கும் என
கற்பனையான சித்தரிக்கும் காட்சிகள் மனிதர்கள் நடித்து காண்பிக்க இறுதியில் மரித்த இயேசு உயிர்த்தெழுவது போன்ற காட்சி நடைபெற உள்ளது.
பின்னர் உயிர்த்த
இயேசுவின் சப்பரத் திருவிழாவானது ஞாயிற்றுக்கிழமை நாளை காலை நடைபெற உள்ளது .
Hindusthan Samachar / GOKILA arumugam