Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மிகப்பெரிய சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது.
இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக தங்கம் வெள்ளி விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,125க்கும், சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 11) தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.
அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,100க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.11,760க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.94,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P