Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 11 ஏப்ரல் (ஹி.ச.)
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி 1500 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசிப்பதுடன், அருவியில் குளித்தும், தொங்கு பாலத்தில் நின்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் நேரத்தை கழித்து வருகின்றனர்.
மேலும், அங்கு கிடைக்கும் மீன் உணவுகளை வாங்கி பூங்கா பகுதிகளில் அமர்ந்து சாப்பிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இந்நிலையில், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam