Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச)
தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியீடு தள்ளிப்போன நிலையில், கடந்த 9ஆம் தேதி சமூக வலைதளங்களில் ஜன நாயகன் திரைப்படம் முழுமையாக வெளியானது.
இதனால் படக்குழுவினர் உட்பட திரைப்பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது தொடர்பாக படத்தை தயாரித்த கேவிஎன் புரோடக்ஷன்ஸ் எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
யார் திரைப்படத்தை வெளியிட்டனர் என்பது குறித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், யாரும் பகிரவோ, டவுண்லோடு செய்யவோ வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தமிழக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் தமிழக சைபர் கிரைம் போலீசார் ஐடி.பிரிவு, காப்புரிமை சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர்.
குறிப்பாக திரைப்படத்தின் புட்டேஜ் யார் யாரிடம் உள்ளது என அனைத்தையும் விசாரணை செய்து, அவர்களை அழைத்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதே போல யார் மூலமாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவப்பட்டது என ஐபி முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் எந்தெந்த சமூக வலைதளங்களில் திரைப்படம் வெளியாகி உள்ளதோ அதை கண்காணித்து பிளாக் செய்ய உள்ளனர்.
யார் முதலில் பரப்பினாரோ அவர் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ