ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு ரூ.500கோடி இழப்பு - திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பேட்டி
திருப்பூர், 11 ஏப்ரல் (ஹி.ச.) ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டியளித்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது; ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்
திருப்பூர் சுப்ரமணியம்


திருப்பூர், 11 ஏப்ரல் (ஹி.ச.)

ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேட்டியளித்தார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது;

ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்டது பெரிய அதிர்ச்சி. இந்த திரைப்படம் 2026இல் பெரிய படமாக எதிர்பார்க்கப்பட்டது அது இவ்வாறு வெளியிடப்பட்டது திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளருக்கு 400 முதல் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்த படம் வெளியிடப்படும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்த்து இருந்தோம் ஏற்கனவே ஓடிடி உரிமம் வழங்கப்பட்ட நிலையில் பட வெளியீடு தள்ளிப் போனதால் ஓடிடி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது அதேபோல விநியோகஸ்தர்களும் 70 கோடி ரூபாய் அளவில் தயாரிப்பாளர் இடம் பணம் கொடுத்துள்ளனர்.

அவர்களும் அந்த பணத்தை திருப்பி கேட்பார்கள் எப்படி இருந்தாலும் தயாரிப்பாளருக்கு தான் அனைத்து நஷ்டம் ஏற்படும்.

இந்த வாரம் சென்சார் சர்டிபிகேட் பெறப்பட்டு 10ஆம் தேதி அளவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்து இருந்தோம் விடுமுறை காலம் என்பதால் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி இருப்பது அனைவருக்கும் வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த விஜய் படங்கள் 100 கோடியை கடந்து தமிழகத்தில் வசூல் செய்திருக்கிறது அதன் மூலம் 50 கோடிக்கு மேல் திரையரங்க பங்கு இருந்த நிலையில் இந்த படம் இனி திரையரங்கில் வெளியானாலும் அந்த அளவு வசூல் கீற்றுமா என்பது சந்தேகமே .

இந்த இக்கட்டான சூழலில் திரையரங்க உரிமையாளர்கள் விநியோகத்தர்கள் அனைவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு எந்த அளவு உதவ முடியுமோ அதனை செய்து கொடுப்பது என தீர்மானித்துள்ளோம்.

படத்திற்கான சர்டிபிகேட் பெற்று அடுத்த வாரம் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam