ஜோதிராவ் பூலேவின் 200வது பிறந்தநாள் விழா- ராகுலை சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி!
புதுடெல்லி, 11 ஏப்ரல் (ஹி.ச.) இந்தியாவில் 19ம் நூற்றாண்டின் மிகப்பெரும் சீர்திருத்தவாதியாகவும், பெண் கல்விக்கும், பெண்களின் அடிப்படை உரிமைகளுக்குமான போராட்டத்தில் தனது இணையர் சாவித்ரிபாய் பூலேவுடன் உறுதுணையாக நின்றவருமான ஜோதிபா பூலே பிறந்த நாள் இன
மோடி


புதுடெல்லி, 11 ஏப்ரல் (ஹி.ச.)

இந்தியாவில் 19ம் நூற்றாண்டின் மிகப்பெரும் சீர்திருத்தவாதியாகவும், பெண் கல்விக்கும், பெண்களின் அடிப்படை உரிமைகளுக்குமான போராட்டத்தில் தனது இணையர் சாவித்ரிபாய் பூலேவுடன் உறுதுணையாக நின்றவருமான ஜோதிபா பூலே பிறந்த நாள் இன்று.

இன்று நாடே மகாத்மா எனக் கொண்டாடும் காந்தியே ஒருவரை மகாத்மா என்று கூறினால் அது ஜோதிராவ் பூலேவை தான். 1933 ஆம் ஆண்டு மே மாதம் எரவாடா சிறையிலிருந்த நேரத்தில், ‘பூலே ஒரு உண்மையான மகாத்மா’ எனப் பாராட்டினார்.

சாவித்ரிபாயை திருமணம் செய்து கொண்டு மற்ற குழந்தைகளை போல் தந்தை சொல் கேட்டு குடும்பம் நடத்தாமல் ஒட்டுமொத்த குடும்பம் மற்றும் சமூகத்தை எதிர்த்து கொண்டு சாவித்ரிபாயிக்கு கல்வி கற்று கொடுத்தார் ஜோதிராவ். அதோடு நிற்காமல் அவரை ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கும் அனுப்பி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் மாற முழு உறுதுணையாக இருந்தார்.பெண்கள் பேசுவதே குற்றம் என்று கருதப்பட்ட காலகட்டத்தில் பெண்களுக்கு எழுதவும் படிக்கவும் கற்று கொடுக்க துவங்கினர் இருவரும். முதன்முதலில் இந்தியாவில் பெண்களுக்கான பள்ளியை 1848ம் ஆண்டு புனேவில் துவங்கினர் பூலே தம்பதியினர். அதில் ஆசிரியராக சாவித்ரிபாயே பணியாற்றினார். இதற்காக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தனர் இந்த தம்பதி. குறிப்பாக ஒரு கட்டத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களின் அழுத்தம் தாங்காமல் ஜோதிராவின் தந்தையே இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றினார்.

அந்த சூழலில் ஜோதிராவின் நண்பர் உஷ்மான் ஷேக் மற்றும் அவரது தங்கை பாத்திமா ஷேக் ஆகிய இருவரும்தான் இவர்களுக்கு தங்க இடமும் கொடுத்து அவர்களது இடத்தில பள்ளியும் நடத்தி கொள்ள உதவிசெய்துள்ளனர். 1852ல் மட்டும் இவர்களால் 3 பள்ளிகள் நடத்தப்பட்டு வந்ததது. அதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் கல்வி கற்றனர். அதில் கூடுதல் சிறப்பே இந்த மூன்று பள்ளிகளில் மட்டும் 273 பெண் குழந்தைகள் கல்வி கற்றனர் என்பதுதான். மொத்தமாக பூலே தம்பதியினர் 18 பள்ளிகளை நடத்தினார்கள் என்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

அப்படி பல்வேறு சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்ட ஜோதிராவ் பூலேவின் 200 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இந்த கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஜோதிராவ் ளவி திருவுருவ பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்றனர் அப்போது ராகுல் காந்தியை சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P