Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 11 ஏப்ரல் (ஹி.ச.)
பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான முழு ஆண்டு தேர்வுகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இந்நிலையில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கையும் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறுவதற்காக பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நள்ளிரவில் இருந்தே காத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்று (11/04/2026) முதல் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என அப்பள்ளி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
பெண் குழந்தைகள் மட்டுமே படிக்கக்கூடிய பள்ளி என்பதால் அதிகமான பெற்றோர் தங்களது குழந்தைகளை அப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்றைய தினம் இரவே அதிக அளவில் அந்த பகுதியில் பொதுமக்கள் கூடினர். ஆனால் காலை தான் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் எனப் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் நள்ளிரவிலேயே பொதுமக்கள் பாய் விரித்துப் படுத்து உறங்கும் சூழலும் ஏற்பட்டது.
அதேபோல் போக்குவரத்து நெருக்கடி உருவாகாமல் இருக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b