Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச)
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பல்வேறு கருத்துகளை ஆவேசமாக முன்வைத்தார்.
காசு இல்லாததால் நான் தொடர்ந்து தோல்வி அடைகிறேன் என்று சொல்கிறார்கள்.
ஆனால் நான் தோல்வியடையவில்லை நீங்கள் தான் தோல்வியடைந்தீர்கள்.
என்னைப் பார்த்தால் தோல்வியடைந்தவன் போல தெரியுகிறதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், தோல்விக்கு பயந்து இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறேனா? நான் முகத்தை காட்டி வாக்கு கேட்பவன் அல்ல.என் கருத்துகளை சொல்லி வாக்கு கேட்கிறவன்,எனத் தெரிவித்தார்.
சாதி அரசியலை கடுமையாக விமர்சித்த அவர், உங்களுக்கு ஜாதிக்கான தலைவன் வேண்டுமா? இல்லை சாதிக்கத் துடிக்கும் தலைவன் வேண்டுமா? சாதியை பார்த்து வாக்கு செலுத்துவதை நிறுத்துங்கள், என வலியுறுத்தினார்.
அவரது உரையின் போது சில நேரங்களில் ஆவேசமாக பேசிய அவர், தவறாக செயல்படும் தலைவர்களை தூக்கி எறியுங்கள்,” என மக்களிடம் அழைப்பு விடுத்தார்.
மேலும், மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய அவர், திரையரங்கில் விசில் அடிப்பது போல அரசியலிலும் கண்மூடித்தனமாக செயல்படாதீர்கள். ரோட் ஷோ பார்த்து மயங்காதீர்கள், என்றார்.
சமூக நலன் குறித்து பேசுகையில், “முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பெறும் மருத்துவ வசதிகளை பொதுமக்களுக்கும் வழங்குவேன்,என வாக்குறுதி அளித்தார்.
அவரது உரையின் நடுவே பதனீர் குடித்ததும் கூட்டத்தில் சிறிய கவன ஈர்ப்பை ஏற்படுத்தியது.
மொத்தத்தில், சீமான் பேச்சு ஆதரவாளர்களிடையே உற்சாகத்தையும், அரசியல் வட்டாரங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ