சூர்யவன்ஷி – ஜூரெல் ருத்ர தாண்டவம்- 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி
குவகாத்தி , 11 ஏப்ரல் (ஹி.ச) ஐபிஎல்2026 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 8 விக்
R


குவகாத்தி , 11 ஏப்ரல் (ஹி.ச)

ஐபிஎல்2026 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 201 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் நிலைநிறுத்திக் கொண்டது.

சூர்யவன்ஷி 26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டம் காட்டினார்.

அவருடன் இணைந்த ஜூரெல் 43 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார்.

இருவரின் சிறப்பான கூட்டணியால், ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது.

இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால், ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA