விரைவில் தமிழகத்தில் ராகுல் காந்தி பரப்புரை – திருநாவுக்கரசர் நம்பிக்கை
சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் விரைவில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து திருச்சி செல்லும்
Thiru


சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், தமிழகத்தில் விரைவில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முன் பேசிய அவர்,

கேரளா மற்றும் புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தமிழ்நாட்டிலும் விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறினார்.

தமிழக தேர்தல் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கான திட்டங்கள் தயாராகி வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் வருகை காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் எனவும் திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ