மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..!
தமிழ்நாடு, 11 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அ
மழை


தமிழ்நாடு, 11 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்றும், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம்கணித்துள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P