Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையை அடுத்த போயஸ் கார்டன் பகுதியில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது. அதில் போயஸ் கார்டன் பகுதியில் வசிக்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வீடுகளில் 5 ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சற்று நேரத்தில் அது வெடிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று காலை அலுவலக ஊழியர்கள் வெடிகுண்டு மிரட்டலை பார்த்து உடனே காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் தெற்கு மண்டல கட்டுபாட்டு அறையில் இருந்தும் உடனே தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் இன்று காலை தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல்கள் புரளி என தெரியவந்தது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வீட்டில் சோதனை செய்ய வேண்டாம் என்றும் இது குறித்து புகார் அளிக்க விரும்பவில்லை என கூறியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து வழக்கு பதிவு செய்து gayathri _ Shabaz @ hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P