தமிழகத்தை விட்டு செல்கிறோம் – சீமான் பிரசாரம்
தென்காசி, 11 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவிதாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: என்னை வளர்த்த இந்த தமிழகத்தை விட்டு பாலைவனத்திற்கு வேலை த
சீமான்


தென்காசி, 11 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவிதாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

என்னை வளர்த்த இந்த தமிழகத்தை விட்டு பாலைவனத்திற்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு பிரச்சினைகளை தருபவர்களிடம் ஆட்சி எப்படி போகிறது?

என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது என்றும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் காசு இல்லாததால் தேர்தலில் நான் தோல்வி அடைந்ததாக பேசுகிறார்கள்.

ஆனால், நான் பணம் இல்லாமல் மக்களிடம் நேர்மையாக பிரசாரம் செய்து வருகிறேன்.

அதனால் தான் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam